முதன் முறையாக ரஷிய- வடகொாிய அதிபா்கள் நாளை சந்திப்பு!

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Apr, 2019 12:00 pm
n-korea-s-kim-jong-un-to-meet-putin-in-russia-tomorrow

ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ரஷியாவில் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதல் முறையாக இவா்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும், ஏவுகணை சோதனைகளை கைவிடுமாறு, அமெரிக்கா பலமுறை வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதையொட்டி, இரு நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூளும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்ட்டதை தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

இந்நிலையில் ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் நாளை ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷிய அதிபரின், கிரெம்ளின் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது.

முதல் முறையாக, ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்திக்க உள்ளதால், உலக நாடுகள் இவர்கள் இருவருக்கு இடையேயான சந்திப்பை உற்று நோக்கி கவனித்து வருகின்றன. இந்த சந்திப்பில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close