ஐக்கிய அரபு அமீரகம்: முதல்முறையாக இந்து -முஸ்லீம் தம்பதியரின் குழந்தைக்கு பிறப்புச்சான்றிதழ்

  முத்துமாரி   | Last Modified : 28 Apr, 2019 04:28 pm
in-a-first-uae-gives-birth-certificate-to-girl-born-to-hindu-father-and-muslim-mother

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த தந்தைக்கும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தாய்க்கும், பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசித்து வருவதால், அங்கு மதம் சார்ந்த கொள்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில், அங்குள்ள திருமண விதிப்படி, முஸ்லிம் ஆண் ஒருவர், மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால், முஸ்லிம் பெண் ஒருவர் மற்ற மதத்தினரைச் சார்ந்த ஆண் நபரை திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி முறை ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

அதேபோன்று ஒரு முஸ்லிம் ஆண், வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அந்த குழந்தைக்கு அங்கே பிறப்பு சான்றிதழ் வழங்கப்படாது. ஆனால் முதல் முறையாக இந்த விதிமுறை அங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் வசித்து வரும் கிரண் பாபு என்பவர், கேரளாவைச் சேர்ந்த சனம் சாபு சித்திக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என அவர் ஐக்கிய அரபு அமீரக அரசை நாடினார். வழக்கம்போல், இவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது.  பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு அவர் தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றார். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, அவரது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு. 

இதன்மூலம் முதல் முறையாக ஐக்கிய ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து தந்தைக்கும், முஸ்லிம் தாய்க்கும், பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close