இலங்கையில் தாக்குதல் தொடரும்- ஐஎஸ் தலைவர் கொக்கரிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Apr, 2019 03:59 pm
isil-chief-abu-bakr-al-baghdadi-appears-in-propaganda-video

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி 5 ஆண்டுகளுக்கு பின் இலங்கை தாக்குதல் குறித்து வீடியோவில் பேசும் காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.

வெள்ளை நிற அறையில் அமர்ந்தபடி பேசும்படியாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள அவர், சிரியாவில் நாங்கள் தோற்று போனதாக அமெரிக்கா கூறிவருகிறது.

ஆனால் நாங்கள் தோற்கவில்லை. எங்களுடைய சீலிப்பர் செல்கள் அங்கு இன்னமும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக ஈஸ்டர் அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களை பாராட்டியுள்ளார்.  இலங்கையில் தாக்குதல் நடத்தியதன் மூலம் நாங்கள் துடிப்பாக உள்ளோம் என்பதை நிரூபித்துள்ளோம் என்றும் அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close