ஜப்பானின் 126வது மன்னராக இளவரசர் நருஹிட்டோ நாளை பதவியேற்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Apr, 2019 04:54 pm
japanese-emperor-akihito-declares-historic-abdication

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான 85 வயதான அகிஹிட்டோ  வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக நேற்று பதவி விலகினார். ஜப்பானின் 126வது  மன்னராக இளவரசர் நருஹிட்டோ நாளை பதவி ஏற்க உள்ளார். 

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகியுள்ள அகிஹிட்டோவையடுத்து அவரது மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ நாளை மன்னராக முடிசூட்டப்படுகிறார்.

அப்போது மன்னர் அகிஹிட்டோ அமர்ந்த அரியணையும் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மன்னர் பதவி விலகுவதற்கான சடங்குகள்  தொடங்கியுள்ளன. இதற்காக பாரம்பரிய உடையணிந்து அஹிட்டோ காட்சியளித்தார்.

சடங்குகள் வெளிப்படையாக நடைபெறாது என்ற போதிலும் மன்னர் மாளிகை முன்பு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு மன்னர் அஹிட்டோ பதவி விலகினார். இதையடுத்து நாளை காலை இளவரசர் நருஹிட்டோ ஜப்பானின் 126வது மன்னராக பதிவயேற்கவுள்ளார்.

ஜப்பான் மன்னர் குடும்பத்தினருக்கு அரசியல் செல்வாக்கு கிடையாது என்றாலும் அது அந்நாட்டின் கவுரவமாக கருதப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close