126 மணி நேரம் நடனமாடி, கின்னஸ் சாதனை படைத்த நேபாள பெண்!

  முத்துமாரி   | Last Modified : 05 May, 2019 05:17 pm
nepal-teenager-dances-for-126-hours-straight-sets-new-world-record

நேபாளைச் சேர்ந்த பெண் ஒருவர் தனி ஆளாக, 126 மணி நேரம் நடனமாடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக, இந்திய பெண்ணின் கின்னஸ் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்ற பெண், கடந்த 2011ம் ஆண்டு நீண்ட நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தார். அவர் 123 மணி நேரம் 15 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை படைத்தார். இவர் கேரள பாடல்களுக்கு மோகினியாட்டம் ஆடினார். 

தற்போது, அவரது கின்னஸ் சாதனையை நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டானா நேபாள் என்ற பெண் முறியடித்து, கின்னஸில் இடம்பெற்றுள்ளார். இவர், நேபாள் பாடல்களுக்கு 126 மணி நேரங்கள் தொடர்ந்து தனியாக நடமாடியுள்ளார். இவருக்கு வயது 18. 

இதையடுத்து, நேபாள் பிரதமர் கே.பி.சர்மா ஓலி, சாதனை படைத்த பெண்ணை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close