விமான விபத்து : ரஷ்யாவில் 41 பேர் பலி?

  அனிதா   | Last Modified : 06 May, 2019 01:36 pm
russia-plane-crash-41-people-s-death

ரஷ்யாவின், மாஸ்கோ விமான நிலயத்தில், விமானத்தை தரையிறக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், 41 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து,  முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு, 73 பயணிகளுடன் சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்த விமானிகள் உடனடியாக விமானநிலையத்தை தொடர்பு கொண்டு, விமானத்தை  மாஸ்கோவில் தரையிறங்க முற்பட்டனர்.

விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள், 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து தீ வேகமாக பரவியதால், மற்றவர்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.  இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close