மியான்மர்: ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் விடுதலை!

  அனிதா   | Last Modified : 07 May, 2019 09:33 am
myanmar-reuters-news-journalists-release

மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவரை அந்நாட்டு அரசு இன்று விடுதலை செய்துள்ளது. 

மியான்மரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தின்போது, அங்கு செய்தி சேகரிக்க சென்ற ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் வா லோன் மற்றும் யாவ் சோவ் ஓ காணாமல் போனார்கள். அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த செய்தி நிறுவன நிர்வாகம் புகாரளித்திருந்தது.

இதனையடுத்து, சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்ததோடு, அரசு ரகசியங்களை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக இரு செய்தியாளர்களும்,  அவர்களுக்கு உதவியாக இருந்த ஒரு காவலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இந்நிலையில், நல்லெண்ணத்தின் அடிப்படையில் கைது செய்து செய்யப்பட்ட இரண்டு செய்தியாளர்கள் இருவர் உட்பட 6, 520 பேரை மியான்மர் அரசு விடுதலை செய்துள்ளது.  

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close