ஜெர்மனியில் நாய்க்கு மரண தண்டனை: வலுக்கிறது எதிர்ப்பு

  Padmapriya   | Last Modified : 18 Apr, 2018 01:44 pm

தன்னை வளர்த்த பெண் மற்றும் அவரது மகனையும் கொன்ற குற்றத்துக்காக ஜெர்மனியில் இந்த நாய்க்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சிக்கோ என்று பெயரிடப்பட்ட டெரியர் இன வகை நாய் ஒன்று அதனை வளர்த்த பெண் (52) மற்றும் அவரது மகன் (27) இருவரையும் கடித்து கொன்றுள்ளது. நாயின் வளர்ப்பாளரின் மகள், நீண்ட நேரம் இவர்கள் இருவரையும் தொடர்பு கொண்டுப் பார்த்தும் தொலைப்பேசியில் பேச முடியாத காரணத்தால், வீட்டுக்கு நேர வந்துப் பார்த்துள்ளார்.

அப்போது தான், அவரது தாயும் சகோரரும் வீட்டில் இறந்துகிடப்பது தெரிந்தது. இதனை அடுத்து போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் அவர்களது நாயே இருவரையும் கொன்றது தெரிய வந்தது.

இதனடிப்படையில் நாய் கடித்து இறந்துள்ளது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையைத் தொடர்ந்து நீதிபதி நாய்க்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

ஆனால் நாய்க்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறித்து அங்கு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த மரண தண்டனையை நிறுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதுவரை சிக்கோவின் மரண தண்டனையை நிறுத்த 290,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close