டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 55 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 07 May, 2019 11:48 am
55-dead-36-injured-in-tanker-truck-explosion-in-niger-s-capital-niamey

வடக்கு ஆப்பிரிக்காவில் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்த விபத்தில் 55 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 36 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் நகரில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. தலைநகர் நயாமி பன்னாட்டு விமான நிலையம் அருகே லாரி சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தலைகீழாக ரோட்டில் கவிழ்ந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள் கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்த வழிந்த பெட்ரோலை சேகரிக்க முயன்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக பெட்ரோல் தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கிருந்த 55 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 36 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close