ஜப்பானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  முத்துமாரி   | Last Modified : 10 May, 2019 09:27 am
massive-magnitude-6-3-earthquake-hits-city-in-south-west-japan

ஜப்பானில் கியூஷூ தீவில், அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.6, 6.3 என பதிவாகி உள்ளது.

ஜப்பானின் மியாசகி(Miyazaki) என்ற நகருக்கு தென் கிழக்கே 37 கிமீ தொலைவில் உள்ள பகுதியில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.45 மணிக்கு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அதே பகுதியில் காலை 9 மணிக்கு ஏற்பட்ட  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகி உள்ளது. தொடர்ந்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்துளளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை. அதேபோன்று, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close