குண்டுவெடிப்பில் குழந்தைகள் பலி : ஆப்கனில் பரிதாபம்

  முத்துமாரி   | Last Modified : 12 May, 2019 04:34 pm
afghanistan-at-least-eight-children-killed-two-others-injured-in-ied-explosion-in-ghazni-province

ஆப்கானிஸ்தானில், ஒரு குடியிருப்பு பகுதியில் பயங்கவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில், 8 குழந்தைகள் உயிரிந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான், ஹஸ்னி (Ghazni) மாகாணத்திலுள்ள முகர்(Muqer ) எனும் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகே, ராணுவ வீரர்களை கொல்வதற்காக பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர். இன்று காலை சுமார் 8 மணி அளவில் அந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், அங்கு விளையாடிக்கொண்டிருந்த 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே பயங்கரவாத தாக்குதலில் 8 குழந்தைகள் கொள்ளப்பட்டது அந்நாட்டு மக்கள் மத்தியில் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை அழிக்கும் பொருட்டு, ஆப்கன் படை, அமெரிக்க படையின் உதவியுடன், தலிபான் தீவிரவாதிகள் இருக்கும் இடங்களில் பதில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close