நேபாள்- 14 வயது சிறுமிக்கு பிறந்துள்ள ஆண் குழந்தை!

  ஸ்ரீதர்   | Last Modified : 14 May, 2019 12:59 pm
14-years-old-gives-birth-to-baby-boy

நேபாளை சேர்ந்த 13 வயது மாணவனும், 14 வயது மாணவியும் பெற்றோர் ஆகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள் நாட்டிலுள்ள தாடிங்க் என்ற கிராமத்தைச்சேர்ந்த 14 வயது மாணவி பபித்ரா தமாங். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் அதே பள்ளியில் படித்து வந்த ரமேஷ தமாங் என்ற மாணவனுடன் பபித்ராவுக்கு காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த வருடம் பபித்ரா தனது பள்ளி படிப்பை நிறுத்தினார். ஆனால் மாணவன் ரமேஷ்வுடனான காதல் மட்டும் தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் பபித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த தகவல் அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. ஆனால் பபித்ரா மற்றும் ரமேஷால் தங்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்ய முடியவில்லை. உள்ளூர் மாநகராட்சி இந்த சிறுவர்களின் குழந்தை பிறப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் அதனால் அக்குழந்தையின் பிறப்பை பதிவு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அவர்களுக்கு பிறந்துள்ள குழந்தை மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் அக்குழந்தையின் இரண்டு கைகளிலும் நடுவிரல் இல்லை என்றும் மாவட்ட நல்வாழ்வு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். நேபாள் நாட்டில் ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close