விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 17 May, 2019 12:09 pm
four-dead-in-small-plane-crash-near-dubai-airport

துபாய் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்ற குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் தயாரிப்பான 4 பேர் பயணிக்கும் குட்டி விமானம் ஒன்று, துபாய் விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சிறிது தூரம் மேலேறிய நிலையில், திடீரென கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. உடனடியாக அங்கிருந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால், விமானத்தில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  பலியான 4 பேரில் 3 பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் தென்னாப்பிரிக்க நாட்டுக்காரர். விமான நிலையத்தின் உள்ளேயே இந்த விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பானது. விமான சேவையும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் நிலைமை சீரான பின்னர் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close