நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 18 May, 2019 12:51 pm
fourteen-killed-in-nigeria-boko-haram-attacks

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மீனவர்கள், விவசாயிகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள மச்சில்முரி என்ற கிராமத்தில் புகுந்த போகோச ஹராம்  தீவிரவாதிகள் அங்கிருந்த ஏரிக்கரை அருகே இருந்த  மீனவர்களை கண்மூடித்தனமாக சுட்டனர்.  இந்த தாக்குதலில் 10 மீனவர்கள்  உயிரிழந்தனர். 

மேலும் கிராமத்துக்குள் சென்ற தீவிரவாதிகள் அங்கு வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயிகள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் சென்று சுட்டுக்கொல்லப்பட்ட 14 பேரின் உடல்களை கைப்பற்றினர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close