ஆப்கானிஸ்தான்- குண்டு வெடித்து சிறுமி உள்பட 2 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 18 May, 2019 01:26 pm
child-among-two-killed-in-afghan-blast

ஆப்கானிஸ்தானில் இன்று காலை சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஓபா மாவட்டத்தில் இன்று காலை சாலையோரம் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த வெடி விபத்தில் அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு தலிபான் உள்பட எந்த ஒரு தீவிரவாத அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close