இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

  ஸ்ரீதர்   | Last Modified : 18 May, 2019 03:08 pm
5-6-magnitude-earthquake-jolts-indonesia

இந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவாகியது.

இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.6ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மண்டல புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த வீடுகள் குலுங்கின. எனினும் இதனால் உயிருக்கோ, பொருட்களுக்கோ சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இத்தீவு அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகள் ஏற்படுவதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close