ஏரிக்குள் படகு கவிழ்ந்து 30 பேர் உயிரிழப்பு.. 200க்கும் மேற்பட்டோர் மாயம் !

  டேவிட்   | Last Modified : 28 May, 2019 07:45 am
30-dead-more-than-200-missing-after-boat-sinks-on-congo-lake

காங்கோ நாட்டில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காணாமல்போனவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மத்திய ஆப்பிரிக்க நாடான ஒன்றான காங்கோவில்  உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் சாலை வசதிகள் இல்லாததால், அங்குள்ள மக்கள் படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி இரவு 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்த ஏரியில் சென்ற படகில் அதிக அளவில் பயணிகள் பயணித்தனர். 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.  

இதனால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். மேலும் 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காணாமல் போன 200-க்கும் மேற்பட்டோரின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை.  காணாமல்போனவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close