சிரியாவில் கார் குண்டு வெடித்து 14 பேர் பலி!

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 11:09 am
car-bomb-kills-14-in-rebel-held-northern-syrian-town

சிரியாவில் மசூதி அருகே கார் குண்டு வெடித்ததில் குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 

சிரியாவில் உள்ள அசாஸ் என்ற நகரின் அருகே உள்ள மசூதியில் ரம்ஜான் தொழுகைக்காக நேற்றிரவு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது மசூதி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில், மசூதியில் தொழுகைக்காக கூடியிருந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் உள்பட 14 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close