ஆப்கானில் குண்டு வெடிப்பு- 2 பேர் பலி: 14 பேர் படுகாயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jun, 2019 03:25 pm
2-killed-14-wounded-in-explosion-in-afghanistan-s-baghlan-province

ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் தொழுகையின் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள நஹ்ரெயின் மாவட்டத்தில் உள்ள மசூதியில் இன்று ரம்ஜான் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாக்லான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close