பிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவத்தளபதி! வடகொரிய அதிபரின் கொடூர செயல்..

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 05:41 pm
kim-jong-un-executes-general-by-throwing-him-in-piranha-filled-fish-tank

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்ட ராணுவ தளபதியை கொன்று பிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கிய சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வட கொரிய நாட்டின் அதிபர் 'கிம் ஜாங் உன்' அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சியை புரிந்து வருகிறார். அவர் ஐ.நாவின் தடையையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை நடத்தி பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தவர். 

மேலும், தனது அதிகாரம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காக தனக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கொடூரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, முன்னதாக கியூபா மற்றும் மலேசிய தூதர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதேபோன்று வடகொரியா சென்ட்ரல் பேங்கின் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட 16 அதிகாரிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். சமீபத்தில் அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, அதற்கு காரணமான 4 அதிகாரிகளை கிம் ஜாங் கொன்றதாகவும் ஒரு தகவல் வெளியானது. 

இதைத்தொடர்ந்து, அதிபருக்கு எதிராக ராணுவ புரட்சி செய்யத் திட்டமிட்ட ராணுவ தளபதி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு, பிரான்ஹா  மீன்களுக்கு இரை ஆக்கப்பட்டுள்ளார். அவரது கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில், அதிபரின் வீட்டில் உள்ள பிரம்மாண்ட பிரான்ஹா மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு ராணுவத் தளபதியை இரை ஆக்கியுள்ளார். இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1977ம் ஆண்டு வெளியான 'The Spy Who Loved Me' என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இதுபோன்று ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். இதைப்பார்த்து தான் கிம் ஜாங் இவ்வாறு செய்திருப்பார் என்று கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close