சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 08:51 am
magnitude-6-4-earthquake-hits-chile-s-coast

சிலி நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சிலி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் அதிர்வடைந்தன.

பீதியடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், இந்த நிலநடுக்கத்தில் பொருட் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், உயிர்சேதம் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று சிலி நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.7 என்ற ரிக்டரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close