தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிக்க முடியாது- பிரதமர் மோடி பேச்சு

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Jun, 2019 01:44 pm
in-bishkek-pm-modi-talks-tough-on-terror-in-message-to-pakistan

தீவிரவாதத்தை ஆதரிக்கும் போக்கை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இன்று உரையாடிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது என்றார்.

உலகம் முழுவதும் தீவிரவாதத்தை எதிர்க்க அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும் என்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மாேடி அமர்ந்திருந்த 3வது இருக்கையில் அமர்ந்திருந்தாலும் அவரிடம் பேசுவதை பிரதமர் மோடி தவிர்த்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close