நைஜீரியா- மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Jun, 2019 03:28 pm
30-dead-in-nigeria-triple-suicide-bombing

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவில் உள்ள கொண்டுகா என்ற பகுதியில் உள்ள திறந்தவெளி அரங்கில் ரசிகர்கள் தொலைகாட்சியில் கால்பந்து விளையாட்டை கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 3 போகோ ஹராம் தீவிரவாதிகள் தாங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

இந்த தாக்குதலில் அங்கிருந்த ரசிகர்களில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close