இந்தோனேசியா- படகு ஆற்றில் கவிழ்ந்து 17 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Jun, 2019 05:13 pm
17-including-3-children-killed-dozens-missing-as-boat-capsizes-in-indonesia

இந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவிலிருந்து நேற்று இரவு திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று மதுரா தீவிற்கு புறப்பட்டது.

அந்த படகில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த படகு இன்று சுமனெப் என்ற தீவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது படகு உடைந்து ஆற்றில் மூழ்கியது.

இதில் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மேலாண்மை குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஆற்றில் மூழ்கிய 3 குழந்தைகள் உள்பட 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 39 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close