கம்போடியாவில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 17 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 10:01 am
building-under-construction-topples-in-cambodia-killing-17

கம்போடியாவில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், பணியாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கம்போடியா நாட்டில் Sihanoukville என்ற கடலோர நகரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஏழு மாடி கட்டிடம் ஒன்று கட்டடப் பணியில் இருந்து வந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பல பணியாளர்கள் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கினர். 

பின்னர் மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், 17 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கட்டுப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணியானது நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close