ஐ.நா பாதுகாப்பு சபையில் உறுப்பினராகும் இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 01:41 pm
55-nations-back-india-for-non-permanent-unsc-seat

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா, இரண்டு ஆண்டுகளுக்கு நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்க ஆசிய - பசிபிக் அமைப்பைச் சேர்ந்த 55 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதில், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் அடங்கும். 

ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர் பதவியில் உள்ளன. மேலும், இரன்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும். அதில் 5 தற்காலிக உறுப்பினர் பதவிகள் அடங்கும். 

இதில், ஐ.நா பாதுகாப்பு சபையின் தற்காலிக/நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியாவை நியமிக்க ஆசிய- பசுபிக் அமைப்பை சேர்ந்த 55 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. 

இதில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தோனேசியா, ஜப்பான், ஈரான், குவைத், மலேஷியா, மாலத்தீவுகள், மியன்மர், நேபாளம், சவூதி, இலங்கை, சிரியா, துருக்கி இத்துடன் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளும் அடங்கும். 

இதன்படி, 2021-22 காலகட்டத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் நன்றி தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close