இந்தியா பொருளாதார சக்தி மிக்க நாடாக ஜப்பானால் உதவ முடியும் : பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 07:44 pm
japan-can-help-india-become-usd-5-trillion-economy-pm-modi

இந்தியா பொருளாதார ரீதியில் சக்தி மிக்க நாடாக வளர்வதற்கான உதவிகளை புரிய ஜப்பானால் முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜப்பானில் உள்ள ஓசாகா நகரில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக, கோபே நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. பல நூற்றாண்டுகளாக நீடித்துவரும் பெருமைமிக்கது. சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களால் இந்த உறவு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மேலும் வலுபெற்றது. 2014 -இல் எனது தலைமையிலான அரசு, மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், இந்தியா - ஜப்பான் இடையேயான ராஜாங்கரீதியான உறவு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் அண்மையில் வீசிய ஃபனி புயலை, குறைவான சேதங்களுடன் நாங்கள் எதிர்கொண்டோம். அரசு இயந்திரம், மனித வளம் ஆகியவற்றுடன் விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்த இயற்கை பேரிடரை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது. தொழில்நுட்பத்தில் இந்தியா சிறப்பு விளங்குகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

உலக அளவில் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக ஜப்பான் திகழ்கிறது. எனவே, தங்களது ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மதிப்பு 5 பிரில்லியன் அமெரிக்க டாலர்களாக கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரும் பொருட்டு, எங்களுக்கு  உதவ ஜப்பானால் முடியும். இந்தியா பொருளாதார சக்திமிக்க நாடாக உருவாகுவதில் ஜப்பானின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close