ஜப்பானில் கோலாகலமாக தொடங்கிய ஜி-20 மாநாடு!

  முத்துமாரி   | Last Modified : 28 Jun, 2019 11:09 am
g-20-summit-started-in-japan-s-osaka

ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் ஜி- 20 மாநாடு சற்றுமுன் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் சென்றார். ஜப்பான் ஒசாகா நகரில் ஜப்பான் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள இந்திய மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

முதலாவதாக ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவளிகள் முன்னிலையில் உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

தொடர் நிகழ்வாக, ஜப்பான் ஒசாகா நகரில் பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்-யையும் தனியே சந்தித்து பேசினார். இதுபோன்று முக்கிய நாடுகளின் தலைவர்கள் தனித்தனியே சந்தித்து பேசிக்கொண்டனர். 

தொடர்ந்து, அனைத்து நாடுகளின் தலைவர்களும் இணைந்து போட்டோ எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்பின்னர் சற்றுமுன் ஒசாகாவில் ஜி-20 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close