பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன்

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Jun, 2019 10:26 am
australian-pm-tweets-selfie-with-modi-says-kithana-acha-he-modi

ஜி - 20 மாநாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் செல்பி எடுத்துக்கொண்டார்.

ஜி - 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். ஒசாகாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை ஆஸ்திரலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சந்தித்து பேசினார்.

பின்னர் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன், "கித்னா அச்சா ஹே மோடி" (பிரதமர் மோடி எவ்வளவு நல்லவர்) என்று ஹிந்தியில் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் தேர்தல் வெற்றிக்கு பின் இரு பிரதமர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close