ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 34 பேர் பலி!

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jul, 2019 01:05 pm
afghanistan-34-dead-over-65-injured-after-powerful-blast-rocks-kabul

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 65 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்தது. காபூலில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அருகில் இந்த குண்டு வெடித்தது.

குண்டு வெடித்தவுடன் அங்குள்ள சந்தை பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 65 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதி ராணுவ கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close