லிபியாவில் அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல்- 40 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jul, 2019 10:37 am
airstrike-hits-migrant-detention-center-in-libya-40-killed

லிபியாவில் அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல் நடைபெற்றதில் 40 அகதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 80 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிபியாவில் உள்ள டிரிபோலி நகரில் ஜ.நா. அகதிகள் முகாம் உள்ளது. இங்கு எதியோபியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லிபிய தேசிய ராணுவம் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நாவின் தலையிடு இருக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் அகதிகள் முகாம் மீது லிபிய தேசிய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 40 அகதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 80 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close