நேபாளம்: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2019 12:08 pm
11-killed-in-landslide-in-western-nepal

நேபாள் நாட்டில் பெய்துவரும் தொடர் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், காணாமல் போன இருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பருவமழை காரணமாக நேபாளம் நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்களது வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த கனமழையினால் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நேபாள நாட்டில் மேற்கு மாவட்டமான குல்மியில், நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை மற்றும் பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன இருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

முன்னதாக, அந்நாட்டில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close