உலகம் - ஏப்.26, 2018 - தெறிப்புச் செய்திகள்

Last Modified : 26 Apr, 2018 08:50 pm

எகிப்தில் 30 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி மத்திய மற்றும் தெற்கு சினாய் தீபகற்பத்தில் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் 30 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 173 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் எகிப்து தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் தேவாலயம் மீது துப்பாக்கி சூடு: 19 பேர் உயிரிழப்பு நைஜீரியா நாட்டில் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரிய எல்லையில் கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ள மூன் ஜியே-இன் கொரிய எல்லையில் தென் கொரிய தலைவர் மூன் ஜியே-இன் தனியாக கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ளார். 1953ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர், தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்.

ஈரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் கைவிடலாம்: வருந்தும் பிரான்ஸ் அதிபர் ஈரானோடு வைத்துள்ள சர்வதேச அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைந்திருப்பதற்கு அதிபர் ட்ரம்பை சம்மதிக்க வைக்க எடுத்த முயற்சிகளில் தான் தோல்வியடையலாம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா மங்கோலியா இடையே ஒப்பந்தம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மங்கோலியா சென்றார். அப்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பாக சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close