பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர் நிலநடுக்கம்; 8 பேர் உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2019 09:39 am
eight-killed-after-earthquakes-hit-philippines

பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று முன் தினம் தொடர்ந்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 மற்றும் 4.5 என பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து அதன் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.

மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close