பெண்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்கும் சவூதி அரசு!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 12:47 pm
saudi-arabia-lifts-travel-restrictions-on-women-grants-them-greater-control

சவூதிஅரேபியாவில் பெண்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் வெளிநாடு சென்று வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சவூதி அரேபிய அரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி அவர்களுக்கு  ஆதரவாக  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பெண்களுக்கான கல்வி உரிமை, வாக்களிக்கும் உரிமை, பெண்களை பொது நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி, வாகன ஓட்டுநர் உரிமை வழங்குதல், கார் ஓட்ட அனுமதி, தொழில் தொடங்க அனுமதி, விமானப்பணியில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சவூதிஅரேபியாவில் பெண்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் வெளிநாடு சென்று வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக, வீட்டில் உள்ள ஆணின் அனுமதி பெற்று, அவருடனே வெளிநாடு சென்று வர வேண்டும் என்ற விதிமுறை அந்நாட்டு பெண்களுக்கு இருந்தது. பாஸ்போர்ட் பெறவேண்டும் என்றாலும் கணவர்/ தந்தையின் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், தற்போது வீட்டில் உள்ளவர்களின் அனுமதி இல்லையென்றாலும் பெண்கள் தனியாக வெளிநாடு பயணிக்கலாம் என்றும் 21 வயது நிரம்பிய பெண்கள் பாஸ்போர்ட் பெற தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close