சீனாவில் நிலநடுக்கம்: ஒருவர் பலி; 63 பேர் காயம்!

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2019 09:33 pm
earthquake-hits-southwest-china-killing-1-injuring-63

சீனாவின் சிச்சுவான் என்ற மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவாகியுள்ளது. 

இன்று காலை 6 42 மணியளவில் சிச்சுவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

இதில் ஒருவர் மட்டும் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள 2500க்கும் மேற்பட்டோர் வேறு பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close