ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் பொய்யானது: அமெரிக்கா குற்றச்சாட்டு

Last Modified : 01 May, 2018 09:30 pm

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பெற்றிருக்கும் உயர்மட்ட ரகசிய ஆவணங்கள்படி, அந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க கட்டுக்கதை என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதிய அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ, "ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் பெற்றிருப்பதாக கூறும் உயர் ரகசிய ஆவணங்கள், ஈரான் பொய் கூறியுள்ளதை காட்டுகிறது. அந்தத் தகவல்கள் அனைத்தும் புதியதாகவும் கவனம் கொள்ள வேண்டியதும் கூட" என்று கூறினார்.

இஸ்ரேலிடம் ரகசிய கோப்புகள் அணு ஆயுதங்களை சோதனை செய்யவில்லை என்று கூறி ஈரான், உலக நாடுகளை ஏமாற்றி இருப்பதை உறுதிபடுத்தும் விதமான ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் இஸ்ரேலிடம் சிக்கியுள்ளதாக அதன் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். தன் மீது சர்வதேச அளவில் இருந்த தடைகளை நீக்குவதற்காக, அணுத் திட்டத்தை 2015-ஆம் ஆண்டு கைவிட ஈரான் ஒப்புக்கொண்டடு, அணு சக்தியை மட்டுமே பயன்படுத்துவதாக கூறியது. "அமத் பணித்திட்டம்" என்ற குறியீட்டு பெயரோடு 2003ம் ஆண்டு வரை ஈரான் ரகசிய அணு ஆயுத திட்டத்தை நடத்தி வந்துள்ளதாக நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். இந்த பணித்திட்டத்தை நிறுத்திய பின்னரும் ஈரான் அணு ஆயுதங்கள் பற்றிய ஆய்வை ரகசியமாகவே தொடர்ந்து வந்துள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மறுக்கும் ஈரான்: ஏற்கனவே ஐ.நா கண்காணிப்பு அமைப்பால் விசாரிக்கப்பட்ட குற்றச்சாட்டை, இஸ்ரேல் தற்போது தோண்டி எடுப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவிட் ஸரிஃப் தெரிவித்திருக்கிறார். ஈரானோடு இருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை தொடரும் அமெரிக்காவின் எண்ணத்தை பாதிக்க நேதன்யாகு மேற்கொள்ளும் குழந்தைத்தனமான நடவடிக்கை இது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானின் அணுதிட்டத்தை கைவிடுவது தொடர்பாக 5 உலக வல்லரசு நாடுகளும், அமெரிக்காவும் 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, காலகட்டத்தில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம் தேவையற்றது என்றும் அதிலிருந்து விலகப் போவதாகவும் ட்ரம்ப் அரசு அவ்வப்போது கூறி வருகிறது. மேலும் நேதன்யாகுவின் ஆவணங்களில், புதிய மற்றும் கட்டாயம் தெரிய வேண்டிய விவரங்கள் இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிட்டிருக்கிறது. இதனை பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் அனுப்பியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரானுடன் அணு ஒப்பந்தத்தை தொடர்வது மிகவும் முக்கியமானது என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close