பிரேசில்: மருத்துவமனையில் தீ விபத்து; 11 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2019 07:30 pm
death-toll-in-brazil-hospital-fire-rises-to-11

பிரேசில் நாட்டில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசில் நாட்டில் பாதிம் என்ற தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 90 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதை பரவியதை அறிந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் இருந்தவர்களை வெளியே அனுப்பினர். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close