கொலம்பியாவில் விமான விபத்து: 7 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 09:53 pm
colombia-plane-crash-7-dead

கொலம்பியா நாட்டில் பொபையன் என்ற நகரில் சிறிய விமானம் ஒன்று திடீரென அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 9 பயணிகள் பயணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானத்தில் பயணித்த ஒன்பது பேரில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும், குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் விமானம் விழுந்த வீட்டில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close