• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

கேப் டவுன் தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வு: பனிப்பாறையில் இருந்து 'குடிநீர்'

Last Modified : 02 May, 2018 08:28 pm

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வாக, அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப்டவுன். 'எல்-நினோ' பாதிப்பால் அந்நாடு முழுவதுமே பாதிக்கப்பட்டாலும், கேப்டவுன் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழையின்மை, நீர் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்ளாதது போன்ற காரணங்களால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் 40 லட்சம் மக்கள் தண்ணீருக்காக அங்கு தவித்தனர்.

கட்டுபாட்டால் நகரும் நாட்கள்: உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரம் என்றபடியான ஆபத்தான நிலைக்கு சென்று, மற்ற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பிரச்னையின் தீவிரத்தை புரிந்து அந்நாட்டு அரசு, பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. இதன்படி நகர நிர்வாகம் வழங்கும் தண்ணீரில், ஒருவர் ஒரு நாளைக்கு 50 லிட்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த நீரில் கார் கழுவுதல் உள்ளிட்டவைக்கு தடை, தண்ணீர் பயன்பாட்டை கண்காணிக்க பாதுகாவலர்கள் என கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

'டே ஜீரோ' முற்றிலும் தண்ணீர் இல்லாத நிலைக்கு செல்லும் நாள் தான் 'டே ஜீரோ' என அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வரும் சிக்கன நடவடிக்கைகளால் 'டே ஜீரோ' என்ற நிலைக்கு செல்லாமல் கேப்டவுன் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளது.

பஞ்சத்துக்கு தீர்வு: இந்த நிலையில் கேப்டவுனின் தண்ணீர் தேவையை தீர்ப்பதற்கு, புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு தண்ணீர் மேலாண்மை வல்லுநர் நிக் ஸ்லோனே கூறுகையில், ''இங்கு ஏற்கெனவே தண்ணீர் கட்டுப்பாடு அமலில் உள்ளது. மேலும் வரும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் மழை போதிய அளவில் கைகொடுக்கவில்லை என்றால், புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். அண்டார்டிகா பனிப்பாறைகளை, வெட்டி கொண்டு வந்து அதனை உருகச்செய்து, தண்ணீர் உற்பத்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இது கைகொடுக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close