அமெரிக்கா: வாஷிங்டன் நகரில் சாலையில் திடீர் துப்பாக்கிச்சூடு!

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 09:40 am
one-killed-and-five-injured-after-a-shooting-in-northwest-washington-dc

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் சாலையில் மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. 

அமெரிக்காவில் நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து வருவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று வாஷிங்டன் நகரில் சாலை ஒன்றில் நடந்து சென்றவர்கள் மீது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி உள்ளது.

அந்நாட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close