உலகம் - மே.02, 2018 - தெறிப்புச் செய்திகள்

Last Modified : 02 May, 2018 07:41 pm

உலகில் காற்றுமாசு நிறைந்த நகரங்கள் 20, அதில் 14 இந்திய நகரங்களாம்! உலக அளவில் காற்றுமாசு பாதிப்பு அதிகம் உள்ள 20 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் 14 இந்திய நகரங்கள் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரை முந்திய பிரதமர் மோடி: அமெரிக்க அதிபர் ட்ரம்பை விட ஃபேஸ்புக்கில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டவராக பிரதமர் மோடி திகழ்கிறார். உலக தலைவர்கள் பற்றி புர்சன் - மார்ட்ஸ்டெல்லர் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கேப்டவுன் தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வு: தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வாக, அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 60 பேர் பலி நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில், போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

லிபியா தேர்தல் ஆணையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் லிபியாவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close