பாகிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 09:57 pm
earthquake-in-pakistan

பாகிஸ்தான் நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீர்பூர், கைபர் ஆகிய இடங்களில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

முதற்கட்டமாக இந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிர்பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close