உலகம் - மே.03, 2018 - தெறிப்புச் செய்திகள்

Last Modified : 03 May, 2018 09:11 pm

அமெரிக்காவில் ராணுவம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் ஹெர்குலஸ் என்ற சி-130 ரக விமானத்தில் 9 ராணுவ வீரர்கள் பயணம் மேற்கொண்டர். அப்போது சாவன்னா விமான நிலையம் அருகில் விமானம் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலையில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒலிபெருக்கிகளை அகற்றியது தென்கொரியா: சமீபகாலமாக வட கொரியாவுடன் இணக்கமான சூழல் ஏற்பட்டு வரும் நிலையில், எல்லையில் வைத்திருந்த ராட்சத ஒலிபெருக்கிகளை தென் கொரியா அகற்றியது.

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி உலகம் முழுவதும் இன்று பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு விவகாரம் - ட்ரம்புக்கு சம்மன் அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக அதிபர் ட்ரம்புக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் ஒப்பந்தத்திலிருந்து விலகினால் போர் மூளும்: ஐ.நா. எச்சரிக்கை ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமேரிக்கா வெளியேறினால் போர் மூளும் அபாயம் உள்ளது என ஐ.நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் எச்சரித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close