உலகம் - மே.4, 2018 - தெறிப்புச் செய்திகள்

Last Modified : 04 May, 2018 07:57 pm

ஹவாயில் எரிமலை சீற்றம் - 1,700 பேர் வெளியேற்றம்: ஹவாயில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவசரமாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1,700 பேர் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இந்த எரிமலை வெடிப்பு 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது.

தென் சீனக்கடலில் சீனா ஆயுதங்கள் குவிப்பு: சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் சீனா ஆயுதங்கள் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி கலிபோர்னியாவில் முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இலக்கிய நோபல் பரிசு இல்லை: பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை காரணமாக, இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கயானா நாட்டு மீனவர்கள் 12 பேரை கொன்ற கடற்கொள்ளையர்கள் தென்அமெரிக்க நாடான கயானாவில் இருந்து அண்டை நாடான சுரினாம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள், கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் உயிரிழந்தனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close