வீக்லி நியூஸுலகம்: 'கிழிந்த ஜீன்ஸ்' முதல் 'ஆயிரம் அடி உயரத்தில் ஊஞ்சல் ஆட்டம்' வரை...

Last Modified : 05 May, 2018 11:54 pm

இணையத்தில் வலம் வரும் முடிந்த அளவுக்கு கிழிந்த ஜீன்ஸ்!

உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள இந்த ஜீன்ஸ் பேன்டின் விலை ரூ.11,000 மட்டுமே!

ஜீன்ஸ் என்றால் இளைஞர்களின் நினைவுக்கு வருவது "ஒரு இரண்டு மாத்ததிற்கு துவைக்காமல் அணிந்துக்கொள்ளலாம்" என்று தான். அதற்கு அடுத்ததாக பார்த்தால் குளிருக்கு அடக்கமாய் அணிந்துக்கொள்ளலாம் என்பது தான். ஆனால் இந்த இரண்டிற்குமே பயன்படாத வகையில் ஓர் ஜீன்ஸ் பேன்ட் இந்த வாரம் வெளியானது. அதுமட்டுமல்லாமல் இதை வாங்க போட்டி வேறு. CARMAR என்னும் ஆன்லைன் விற்பனைத்தளம் அறிமுகம் செய்துள்ள இந்த 'Extreme Cut out Jeans' Pant-னை குறித்த இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. காரணம் இந்த பேன்டின் விலை வெறும் ரூ.11000(இந்திய மதிப்பில்) மட்டுமே. எக்ஸ்ட்ரீம் கட் என்பதிலேயே புரியவைக்கும் வகையில் இதற்கு மேல் கத்தரிக்க அதில் துணியே இல்லை என்பது தான் போலும். மிச்சமிருக்கும் துணியினை மட்டும் எப்படியோ வடிவமைத்து இருக்கிறது இந்த நிறுவனம். துணி தான் கொஞ்சம் கம்மி... மவுசு குறையாத விற்பனை தான் இங்கு வியப்பே!

பெண்ணின் வயிற்றில் 60 கிலோ கட்டி :

உணவருந்த முடியாமல் தவித்த பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 60 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்து கட்டியை அமெரிக்க மருத்துவர் குழு நீக்கியது.

ட்ரம்ப் நிர்வாண சிலை!

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு எதிரான கவன ஈர்ப்பை மேற்கொள்ள வடிக்கப்பட்ட அவரது நிர்வாண சிலையை தற்போது ஆராய்ச்சியாளர் ஒருவர் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

சீனாவில் வானில் கின்னஸ் சாகசம்: ஒரே நேரத்தில் 1374 ட்ரோன்கள் நடனம்

சீனாவில் ஒரே நேரத்தில் 1374 ட்ரோன் விமானங்களை பறக்கவிட்டு வானில் வண்ண சாகசம் நிகழ்த்தப்பட்டது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

ஆயிரமடி மலை உயரத்தில் ஊஞ்சல் ஆட்டம்!

சீனாவின் சோங்கிங் ((Chongqing)) மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் அபாயகரமான ஊஞ்சலாடுவதை மக்கள் வெகுவாக விரும்பி வருகின்றனர். ஆயிரம் அடி உயரமுள்ள மலைக்குன்றின் மேல், 60 அடி நீள கயிற்றில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆட ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் குவிகின்றனர்.

அமெரிக்க ஹோட்டலில் அறுசுவை செய்து அசத்தும் ரோபோ

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஓட்டலில் உணவு தயாரிக்கும் 7 ‘ரோபோ’-க்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை பல்வேறு சுவையான உணவு வகைகளை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. காய்கறிகளை கழுவி அவற்றை நறுக்குதல், இறைச்சியை வெட்டுதல் மற்றும் குழம்பு தயாரித்தல் போன்ற வேலைகளையும் ‘ரோபோ’-க்களே செய்கின்றன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.