இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள பழமைவாத ஆச்சே பிராந்தியத்தில் விபச்சாரம், ஆல்கஹால் குடிப்பது மற்றும் ஓரின சேர்க்கை அல்லது திருமணத்திற்கு முந்தைய உடலுறவு கொள்வது போன்றவை கடுமையான தண்டனைக்குள்ளாகும் குற்றங்களாக வரையறுக்கப்படடவை.
அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர் திருமணமான பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு. 28 சவுக்கடி பெறவேண்டும் என்னும் தண்டனையை பெற்றுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றார் தண்டனைக்குள்ளான நபர் கடுமையான மதச் சட்டங்களை வடிவமைக்க உதவும் ஒரு அமைபபான ஆச்சே உலேமா கவுன்சில் (எம்.பி.யு) உறுப்பினரான முகிலிஸ் என்பவர் ஆவர். இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in