தேனீர் பையுடன் அடக்கமாக விரும்பிய பெண் !

  கண்மணி   | Last Modified : 03 Nov, 2019 05:01 pm
woman-gets-buried-in-teabag-coffin

தேனீர் என்பது அனைவருக்கும் பிடித்த பானம் . இதனை குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்நாளில் மட்டுமல்லாமல் வாழ்வின் இறுதி பயணத்திலும் கூடவே வர வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்  இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரைச் சேர்ந்த டினா வாட்சன். இவர் ஒருநாளைக்கு  30 முதல் 40 கப்புகள் வரை தேனீரை பருகும் தீவிர தேனீர் விரும்பியாக இருந்துள்ளார். இரு முறை புற்று நோயிலிருந்து மீண்டு வந்த இவர் , பூச்சி கடியின் காரணமாகவும், தொற்று காரணமாகவும் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய உறவினரின் இறுதி ஊர்வலத்திக் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பிய டினா தன்னுடைய மக்களிடம் தனது இறப்பிற்கு பிறகு புதைக்க பயன்படுத்தும் சவப்பெட்டி தேனீர் பை போல இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படியே சமீபத்தில் டினா வின் உடல் தேனீர் பை போன்ற சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close