2ம் உலகப் போரில் ஜெர்மன் வீழ்ந்த நாள்: வெற்றி தின கொண்டாட்டம் (படங்கள்)

  Padmapriya   | Last Modified : 09 May, 2018 11:54 am

இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியை வீழ்த்தி ஐரோப்பிய கூட்டுப் படைகள் வெற்றி பெற்றதன் 73-வது ஆண்டு தினம் பிரான்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது.

தலைநகர் பாரிசில் உள்ள போர் நினைவிடத்தில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரான் அஞ்சலி செலுத்தினார். குதிரைப்படை வீரர்கள் புடைசூழ காரில் வந்த அவர், போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபத்தையும் அதிபர் மாக்ரான் ஏற்றி வைத்தார். இதன் பின் ராணுவ அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

2-ஆம் உலகப் போரில் பங்கேற்ற வீரர் ஒருவர் வயது முதிர்ந்த நிலையில், போர் நினைவாக அதன் உடைகளை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்றைய ராணுவ வீரர்களும் போர் நினைவாக அப்போது பயன்படுத்தப்பட்ட ஆடைகளை அணிந்து அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.

உலகப்போர் வெற்றி தின அணுசரிப்பு ஐரோப்பாவிலும் நடைபெற்றது.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், போரில் மரணித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close