மே.9, 2018 - உலக செய்திகள்

Last Modified : 09 May, 2018 06:42 pm

சிரியா தலைநகரில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்:

சிரியா தலைநகர் டமாஸ்கஸின் தெற்கே இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை காத்திடுவோம்: சீனா

அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்காவின் அறிவிப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ள சீனா, ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை பேணிக்காப்போம் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், கெங் ஷூங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

ஈரானை தனிமைப்படுத்த இஸ்ரேல் தீவிரம்:

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதை அடுத்து, ஈரானை தனிமைப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இதற்காக ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு புறப்பட்டார் .

மெட் காலா: சர்வதேச மேடையில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்:

இந்த ஆண்டுக்கான மெட் காலா நிகழ்வில், கத்தோலிக்க கற்பனைகளை வெளிகாட்டும் வகையில் உடைகளை அணிந்து உலகம் முழுவதிலும் உள்ள பிரபல திரைப்பட நடிகர்களும் ஆடை வடிவமைப்பாளர்களும் பங்கேற்றனர். அதில் இந்திய நட்சத்திரங்களான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும், விலை உயர்ந்த கண்கவர் ஆடைகளை அணிந்து கலந்து கொண்டனர். குறிப்பாக, பிரியங்கா சோப்ரா ராஃப்லாரன் டிரெஞ்ச்கோட் கவுன் அணிந்த்ருந்தார். வைர வைடூரியங்களால் ஜொலித்த அவரின் படங்கள் தான் இன்றைய ஹிட் வைரல். தீபிகா சிவப்பு நிற குருங் வகையை சார்ந்த கவுன் அணிந்திருந்தார்.

மலேசியா நாடாளுமன்ற தேர்தல்: இன்று இரவு முடிவு வெளியாகும்

மலேசிய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை வரை அமைதியாக முடிந்தது. 3 மணி நிலவரப்படி 69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்கிய நிலையில், இன்று நள்ளிரவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close